இவ்வளவு கேவலமாவா விளையாடுவீங்க.. இன்னிக்கு தரமான சம்பவம் இருக்கு! வைரலாகும் ரணகள வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் வாக்குவாதங்கள், மோதல்கள் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மூன்று அணியினர்களாக பிரிக்கப்பட்டு மும்முரமாக அரசியல் செய்து வருகின்றனர்.
இதில் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மூன்று அணியினருக்கும் தங்களது கொடியின் ஆதிக்கத்தை காட்டும் வகையில் பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் அனைத்து போட்டியாளர்களும் பயங்கர மும்முரமாக விளையாடியுள்ளனர். மேலும் இதனால் போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாச்சி இவ்வளவு கேவலமாகவா விளையாடுவீங்க என சத்தமிடுகிறார். மேலும் சில தினங்களாக சத்தத்தை குறைத்து கொண்ட தாமரை இன்று கத்தி சண்டை போட்டுள்ளார். அதில் ஆவேசமடைந்த அபினய் அடிப்பதுபோல செல்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.