சினிமா

வேட்டியால் வெடித்த மோதல்! உச்சகட்ட கோபத்தில் சுரேஷிடம் சீறிவந்த பாடகர் வேல்முருகன்! வைரலாகும் ரணகள வீடியோ!

Summary:

பிக்பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ்  நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒரு வாரம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. 

 இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள் என பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டுள்ளது. மேலும் இந்த வாரத்தின் தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய நாளிற்கான இரண்டாவது ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.   

 அதில் பாடகர் வேல்முருகன் என்றும் இல்லாதது போல மற்றொரு போட்டியாளரான சுரேஷிடம் மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.  அதாவது சுரேஷ் பாடகர் வேல்முருகனுக்கு வேஷ்டி கொடுத்தது போலவும், அதனை அவர் எங்கேயோ சுட்டிக்காட்டி அவமானபடுத்தியது போன்றும்  கோபத்தின் உச்சத்திற்கு சென்று வேல்முருகன் பேசியுள்ளார். மேலும் இதனைக் கண்ட போட்டியாளர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். 


Advertisement