அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு.! அசத்தலாக கெத்து காட்டிய போட்டியாளர்கள்.! எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வீடியோ!!

அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு.! அசத்தலாக கெத்து காட்டிய போட்டியாளர்கள்.! எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வீடியோ!!


bigboss-today-promo-viral-K2R52R

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நடைபெற்று வருகிறது. இதுவரை 37 நாட்களைக் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் இருந்து ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அதனால் போட்டியாளர்களிடையே கடுமையான மோதலும் நிலவி வருகிறது.  தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரா வம்சம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறியுள்ளது. மேலும் இதில் ராஜாவாக இராபர்ட் மாஸ்டர், ராணியாக ரட்சிதா, இளவரசியாக ஜனனி ஆகியோர் மாறியுள்ளனர்.

மேலும் அசீம் படைத்தளபதி வேடமிட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ராஜா வேடத்தில் ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரகச்சிதா மிகவும் கம்பீரமாக நடந்து வந்துள்ளார். மேலும் படைத்தளபதியாக அசீமும் கலக்கியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.