இதை மட்டும் செய்யுங்க.. நான் வெளியே செல்லவும் ரெடி! ஆவேசத்தில் கத்திய பிரியங்கா! என்னதான் நடந்தது? பரபரப்பு வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கால் ஒவ்வொரு நாளும் ஆரம்பத்தில் அமைதியாக, சாதுவாக இருந்த பல போட்டியாளர்களின் முகத்திரை கிழிந்து உண்மையான சுயரூபம் வெளி வரத் துவங்கியுள்ளது.
பிக்பாஸ் 5 சீசன்களையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கிவருகிறார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த வார நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். மேலும் தற்போதெல்லாம் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் அபிஷேக் மட்டும் அவ்வப்போது ஏதாவது செய்து கண்டெண்ட் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், நிரூப் பிரியாங்காவிடம் தன்னை கலாய்த்தது குறித்து ஆவேசமாக வாக்குவாதம் செய்ய, அப்பொழுது அபிஷேக் உன்னை கலாய்த்தது நான், என்னிடம் பேசு என குறுக்கிட்டு ஹீரோயிசம் செய்கிறார். இந்நிலையில் கோபமடைந்த பிரியங்கா நான் என்ன பேசினேன் என்பதற்கு குறும்படம் போடுங்கள் பிக்பாஸ். நான் வெளியே செல்லவும் தயார் என கத்துகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சண்டை வெடிக்கலாம்.