பிக்பாஸ் கொடுத்த ரணகளமான டாஸ்க்! அம்பலமான போட்டியாளர்களின் சுயரூபம்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

பிக்பாஸ் கொடுத்த ரணகளமான டாஸ்க்! அம்பலமான போட்டியாளர்களின் சுயரூபம்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!


Bigboss today promo viral

பிக்பாஸ் சீசன் 5 விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் பலரும் எலிமினேட் ஆனநிலையில் தற்போது 12 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

ஆரம்பத்தில் அன்பு, பாசம் என இருந்த போட்டியாளர்கள் தற்போது தங்களை சுற்றி கேமரா இருப்பதை மறந்து சுய ரூபங்களை காட்டத் துவங்கியுள்ளனர். இதனால் போட்டியாளர்கள் இடையே மோதல்கள் மற்றும் மனக்கசப்பு ஏற்பட துவங்கியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

 அதனைத் தொடர்ந்து இன்று தலைவர் பதவிக்காக போட்டியிடுவதற்கான டாஸ்க் பிக்பாஸால் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் தலைவர் பதவிக்காக போட்டியாளர்கள் தங்களது சுய ரூபங்களை வெளிப்படுத்திய நிலையில் அவர்கள் மத்தியில் மோதல் வெடித்தது. இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.