சினிமா

ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கண்கலங்க வைத்த நமீதா! ஏன்? என்னதான் நடந்தது? வைரலாகும் வீடியோ!!

Summary:

ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கண்கலங்க வைத்த நமீதா! ஏன்? என்னதான் நடந்தது? வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி கலகலப்பாகவும், மோதலுடனும் சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

மேலும் இந்த சீசனில் முதல் முறையாக நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கடந்த இரு நாட்களாக போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த சோகமான பாதையை சக பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நமீதா திருநங்கையாக மாறியதும் குடும்பத்திலிருந்து ஒதுக்கப்பட்டதையும், பின்னர் பட்ட துயரங்களையும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனைக்கேட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கண்கலங்கியுள்ளனர். மேலும் நமிதாவிற்கு ஆறுதல் கூறியுள்ளனர்.


Advertisement