அர்ச்சனா கேட்ட ஒத்த கேள்வி! சரமாரியாக பதிலடி கொடுத்த பாலா! செம பரபரப்பில் பிக்பாஸ் வீடு!

அர்ச்சனா கேட்ட ஒத்த கேள்வி! சரமாரியாக பதிலடி கொடுத்த பாலா! செம பரபரப்பில் பிக்பாஸ் வீடு!



Bigboss today first promo viral

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாக 50 நாட்களுக்கு மேல் நடந்துவருகிறது. போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேகாவும்,பின் பாடகர் வேல்முருகனும், அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் கடந்தவாரம் பாடகி சுசித்ரா என இதுவரை 4 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வெற்றி பெற போராடி வருகின்றனர். மேலும் பிக்பாஸ் கொடுக்கும் கடுமையான டாஸ்க்குகளையும்  செய்து முடிக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீடு இந்த வாரம் இரண்டு நாட்களுக்கு கால் செண்டராக மாறவுள்ளது. அதில் சில போட்டியாளர்கள் ஊழியர்களாக பணியாற்ற அவர்கள் வரைமுறையின்றி கஸ்டமர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். 

 இந்த நிலையில் பாலா கால் சென்டர் ஊழியராக பணியாற்ற, அவருக்கு போன் செய்த அர்ச்சனா உங்களுக்குப் பிடித்த நபர்களை மட்டும் முன்னாடி வைத்து விளையாடுகிறீர்கள் என சொன்னீங்க. அவங்க பேரை தெரிஞ்சுக்கலாமா?  என கேட்டுள்ளார். அதற்கு பாலா மிகவும் அமைதியாக முதலில் நீங்க  முன்னிறுத்தி விளையாடுவது சோம், இரண்டாவது ரியோ மற்றும் மூன்றாவது கேப்ரில்லா என பதிலளித்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.