பிக்பாஸ் வீட்டில் ஆரிக்கு ஆதரவாக நின்ற போட்டியாளர்கள்! கோபத்தில் கொந்தளித்த பாலா! எதனால்? வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளிற்கான முதல் ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.


bigboss-today-first-promo-viral-2R8Y5F

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 சமீபத்தில் தொடங்கி வாக்குவாதங்கள், சண்டைகள், உற்சாகங்கள், விழாக்கள் என நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும். பரபரப்பாகவும் 33 நாட்களை கடந்துள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்கால்  போட்டியாளர்களுக்கு இடையே மோதல்கள் நீடித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்றைய நாளிற்கான முதலாவது பிரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பிக்பாஸ் இந்த வாரம் சிறப்பாக செயலாற்றிய மூன்று போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து கூற சொல்கின்றார்.

உடனே பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் பலரும் சோம் பெயரை கூறியுள்ளனர். மீதிப் போட்டியாளர்கள் ஆரியின் பெயரை கூறியுள்ளனர். மேலும் செம கடுப்பாகி பாலா இந்த வீட்டில் அனைவரும் தன்னை கார்னர்  செய்கின்றனர் என கோபப்பட்டுள்ளார் . இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.