அட யாருப்பா நீங்க.. எங்கருந்து வந்துருக்கீங்க.! சக போட்டியாளர்களை கிண்டல் செய்த ஜி.பி முத்து.! ஏன் பார்த்தீங்களா! வைரல் வீடியோ.!Bigboss today 1st promo viral

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி பரபரப்பாகவும், சுவராஷ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது இந்நிகழ்ச்சியில் ஜி.பி முத்து, அசல் கோலார், அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்டன், ரக்ஷிதா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் , ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி வி.ஜே.கதிரவன், குயின்சி, நிவா மற்றும் இம்முறை புதிய முயற்சியாக பொதுமக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஷிவின் கணேஷ் மற்றும் தனலட்சுமி என மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு வைல்ட் கார்ட் என்ட்ரியாக 21வது போட்டியாளராக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இந்த சீசனில் முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்கிடையே சண்டை, சச்சரவு, வாக்குவாதங்கள் தொடங்கிவிட்டது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு கதை சொல்லட்டுமா? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்  போட்டியாளர்கள் அனைவரும் ஒரு நிமிடத்தில் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை கவரும் வகையில் கதை கூற வேண்டும். கதை பிடிக்கவில்லை என்றால் ப்ளாஸ்மா முன்புள்ள 3 பசர்களை அழுத்தி மற்ற போட்டியாளர்கள் அவர்களை நிறுத்திவிடலாம். இந்நிலையில் இன்றைய நாளிற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

அதில் டாஸ்க் செய்வதற்கு ஆயிஷா, ரக்சிதா, குயின்சி, சாந்தி, விக்ரமன் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கபடுகிறது. அப்போது விக்ரமன் பேச துவங்குவதற்கு முன்னே மற்ற போட்டியாளர்கள் பசரை அழுத்தி அவரை பேசவிடாமல் நிறுத்தினர். பின் அவர் வெளியே வரும்போது அனைவரும் கைதட்டினர். இதனை கண்ட ஜிபி முத்து பேசவும் விடமாட்றீங்க, கையும் தட்டுறீங்க யாருப்பா நீங்களாம், எங்க இருந்து வந்துருக்கீங்க என கிண்டல் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.