பரபரப்பாக நடைபெற்ற நாமினேஷன்! பிக்பாஸ் வீட்டின் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் யாரை டார்கெட் செய்துள்ளார்கள் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!

பரபரப்பாக நடைபெற்ற நாமினேஷன்! பிக்பாஸ் வீட்டின் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் யாரை டார்கெட் செய்துள்ளார்கள் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!


Bigboss today 1st promo video viral

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி  பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒரு வாரம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள்  வாக்குவாதங்கள், மோதல்கள், உற்சாகங்கள் என எதற்கும் குறைவில்லாமல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது.  மேலும் வார இறுதியில் கமல் அனைத்து போட்டியாளர்களுடன் உரையாடி பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் பிக்பாஸ் வீட்டின் அடுத்த வாரத்திற்கான தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று இந்த வாரத்திற்கான எவிக்சன் நாமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியாளர்கள் பலரும் அதிகமாக சனம் ஷெட்டி மற்றும் ஷிவானியையே நாமினேட்  செய்துள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.