கலகலப்பாக இருந்த போட்டியாளர்கள்! கம்பீரக் குரலில் பிரியங்காவை எச்சரித்த பிக்பாஸ்! ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோ!!

கலகலப்பாக இருந்த போட்டியாளர்கள்! கம்பீரக் குரலில் பிரியங்காவை எச்சரித்த பிக்பாஸ்! ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோ!!



bigboss-third-promo-viral

விஜய் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டு இரண்டு நாட்கள் வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும், ஏராளமான புதுமுகங்களும் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

முதல் வீடியோவில் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் டைட்டிலை காமெடி நடிகர் வெல்ல வேண்டும் என கூறிய நிலையில் சலசலப்பு ஏற்பட்டு ஆண் போட்டியாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர் ஸ்ருதி, தனது நிறத்தை வைத்து தன்னை பலரும் ஒதுக்கியுள்ளார்கள் என வருத்தத்துடன் கூட, அதற்கு இசைவாணி அறிவுரைகளையும் தத்துவங்களையும் தெறிக்க விடுகிறார்.

இந்நிலையில் தற்போது இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர் ராஜு சின்னப்பொண்ணு மற்றும் தாமரை செல்வி ஆகியோருடன் பேசிக்கொண்டிருப்பதை பிரியங்கா மற்ற போட்டியாளர்களுடன் அமர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்த நிலையில், பிக்பாஸ் தனது கம்பீர குரலில் பிரியங்கா மைக்கை சரியாக மாட்டுங்கள் என எச்சரிக்கிறார். இதனால் அவ்விடத்தில் கலகலப்பு நேர்கிறது.