சினிமா

அட.. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்பொழுதே தொடங்கப்படுகிறதா? தொகுப்பாளர் இவரா? வெளியான சூப்பர் தகவல்!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் 16 போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டிற்குள் எத்தகைய பொழுதுபோக்கும், வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும்
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள், பாடகர்கள், இசை துறையை சேர்ந்தவர்கள் மற்றும் அறிமுகமில்லாதவர்கள் என பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். 

இதன் முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும் மற்றும் அண்மையில் முடிவடைந்த நான்காவது சீசனில் ஆரியும் வெற்றியாளர்களானர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரியில் முடிவுக்கு வந்தது.

Bigg Boss Tamil: Here is a list of contestants who may enter season four -  News

இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கப்படும் எனவும், அதனை நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நிகழ்ச்சி தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement