பிக்பாஸ் ஷிவானி வீட்டில் நடந்த கோலாகல கொண்டாட்டம்! அட.. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா!

பிக்பாஸ் ஷிவானி வீட்டில் நடந்த கோலாகல கொண்டாட்டம்! அட.. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா!


bigboss-shivani-pet-dog-birthday-celebration

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். இரு சீரியல்களில் இருந்தும் அவர் பாதியிலேயே விலகினார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். இதற்கிடையிலேயே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இறுதி வாரம் வரை சென்றார்.

bigboss

இந்த நிலையில் பிக்பாஸ் ஷிவானி  தான் வளர்த்து வரும் நாய் குட்டியின் முதல் பிறந்தநாளை வகைவகையான கேக்குகள் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் பிக்பாஸ் பிரபலங்களான சம்யுக்தா, பாலா, ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இருந்த ஷிவானி பாலாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி, பின்னர் அவரது அம்மா கண்டித்ததை தொடர்ந்தே அவர் டாஸ்குகளில் அதிகம் கவனம் செலுத்தினார் என்பது  குறிப்பிடத்தக்கது.