வெளுத்து வாங்கி அடுத்தடுத்ததாக நடிகர் கமல் கேட்ட கேள்வி! திணறிபோன நிஷா! சூடுபிடிக்கும் பிக்பாஸ்!



bigboss-second-promo-viral

விஜய் தொலைக்காட்சியில் 16  போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.  

மேலும் இந்த வாரம் ரம்யா, நிஷா, ஷிவானி, கேபில்லா, ரமேஷ், சோம் என 6 பேர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன்முறையாக இந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகர் கமல் நிஷா மற்றும் அர்ச்சனாவிற்கு இடையே டாஸ்கின் போது ஏற்பட்ட மோதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது அவர் நிஷா பயன்படுத்திய யுக்தி நியாயமாகபட்டதா?  இப்படி ஒரு நிஷாவை நான் எதிர்பார்க்கவில்லை என கூற அதற்கு நிஷா எந்த ஒரு இடத்திலும் நான் தவறான வார்த்தையை பயன்படுத்தவில்லை என கூறி பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.