பிக்பாஸ் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்கால் ஹீரோவான சுரேஷ்! கட்டியணைத்து கண்கலங்கிய கேப்ரில்லா! வைரலாகும் எமோஷனல் வீடியோ!Bigboss second promo video viral

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ், நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள்  வாக்குவாதங்கள், மோதல்கள், உற்சாகங்கள் என எதற்கும் குறைவில்லாமல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று புதிய போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரமோவில் சுவாரசியமும் ஈடுபாடும் இல்லாத இரு போட்டியாளர்களை தேர்வு செய்து ஜெயிலுக்குள் அடைக்க வேண்டும் என பிக்பாஸ் கூறியதைத் தொடர்ந்து ஜித்தன் ரமேசும், ஷிவானியும் தேர்வு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், கேப்ரியல்லாவுக்கு யார் ஆதரவு தரப்போகிறீர்கள் என பிக்பாஸ் கேட்டதற்கு, உடனே சுரேஷ் எழுந்து நிற்கிறார். அதனைத் தொடர்ந்து சுரேஷ் தனது முதுகில் கேப்ரியல்லாவை தூக்கிக் கொண்டு வெகுநேரம் நிற்கிறார்.

பின்னர் முடியாமல் கேப்ரில்லா கீழே இறங்கி விடுகிறார். இதற்கு சுரேஷ் கோபப்பட உடனே கேப்ரில்லா அன்புடன்  அவரை அணைத்துக் கொள்கிறார். இந்நிலையில் பின்னணிப் பாடலாக ஆராரோ ஆரிராரோ பாடல் ஒலிக்கிறது. இந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.