சினிமா

வேற லெவலில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்! உருண்டு புரளும் போட்டியாளர்கள்! வைரலாகும் வீடியோ!!

Summary:

வேற லெவலில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்! உருண்டு புரளும் போட்டியாளர்கள்! வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இதில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், அடுத்தடுத்ததாக சில போட்டியாளர்கள் எலிமினேட் ஆன நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்த சீசனும் முந்தைய சீசன்களை போல அன்பு, நட்பு,  மோதல் என எதற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது. மேலும் வித்தியாசமான டாஸ்க்குகளால் பலரது சுய ரூபங்களும் வெளி வரத் துவங்கியுள்ளது.  மேலும் இந்த வாரம் 
ஐக்கி, பவானி, சிபி, இமான், அக்ஷரா, நிரூப், இசைவாணி, தாமரை, அபினய் என 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் உள்ளதை உள்ளப்படி காட்டும் கண்ணாடி டாஸ்க் கொடுத்துள்ளது. அதில் போட்டியாளர்கள் ஜோடிகளாக பிரிக்கப்பட்ட நிலையில் ஒருவரை போல் மற்றொருவர் அப்படியே செய்யவேண்டும். இதனால் பிக்பாஸ் வீடு குதுகலமாகியுள்ளது. மேலும் இந்த டாஸ்க்கால் போட்டியாளர்கள் இடையே மோதல் எழவும் வாய்ப்புள்ளது. 


Advertisement