சினிமா

அச்சு அசல் அப்படியே பிரியங்காவாக மாறிய ஆண் போட்டியாளர்! அட..யார்னு பார்த்தீங்களா! வைரலாகும் கலகலப்பு வீடியோ!!

Summary:

அச்சு அசல் அப்படியே பிரியங்காவாக மாறிய ஆண் போட்டியாளர்!அட..யார்னு பார்த்தீங்களா! வைரலாகும் கலகலப்பு வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். அதில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 13 போட்டியாளர்களே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். கடந்த சீசன்களை போலவே இந்த சீசனும் அன்பு, நட்பு, மோதல், வாக்குவாதங்கள் என எதற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் உள்ளதை உள்ளபடியே காட்டும் கண்ணாடி டாஸ்க் கொடுத்தார். அதில் போட்டியாளர்கள் ஜோடியாக பிரிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மற்றொருவரை போன்று அப்படியே செய்யவேண்டும். இதனால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு ஏற்பட்டாலும் சில வாக்குவாதங்களும் உண்டானது.

அந்த டாஸ்க் முடிந்துவிட்டது என எண்ணிய நிலையில், மீண்டும் இன்றும் அதே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் ராஜு ப்ரியங்காவின் கண்ணாடியாக மாறியுள்ளார். அவரைப்போல உடை, தலைமுடி என வைத்து நிறைய கலாட்டாக்கள் செய்கிறார். இதனால் பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 


Advertisement