சினிமா

திடீரென பிரியங்காவை வீட்டைவிட்டு வெளியேற சொன்ன பிக்பாஸ்! ஏன்? அப்படி என்னதான் நடந்தது? வைரலாகும் வீடியோ!!

Summary:

திடீரென பிரியங்காவை வீட்டைவிட்டு வெளியேற சொன்ன பிக்பாஸ்! ஏன்? அப்படி என்னதான் நடந்தது? வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இறுதி வாரத்தில் இருக்கும் இந்த சீசனில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் ராஜு, அமீர், நிரூப், பாவனி, பிரியங்கா ஆகியோர் மட்டுமே உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இறுதி வாரம் என்பதால் கலகலப்பான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், போட்டியாளர்களுக்கு பிக்பாஸாக மாற வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது பிரியங்கா பிக்பாஸாக மாறிய போது, போட்டியாளர்கள் எல்லோருக்கும் 2 மணிநேரம் தூங்க நேரம் கொடுக்கிறார். பின்னர் ராஜு பிக்பாஸாக இருந்த போது 'பிரியங்கா அப்படியே மெயின் கதவு வழியாக வெளியே செல்லுங்கள்' என காமெடியாக கூறுகிறார். உடனே போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்கின்றனர். அந்த கலாட்டாவான ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது.

 


Advertisement