சினிமா

தரமான வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்! சிக்கலில் தள்ளப்பட்ட போட்டியாளர்கள்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

Summary:

தரமான வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்! சிக்கலில் தள்ளப்பட்ட போட்டியாளர்கள்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கிய நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே தவிர்க்க முடியாத காரணங்களால் திருநங்கையான நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், மாடல் நாடியா சாங் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து கடந்த வாரம் அபிஷேக் எலிமினேட் ஆனார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் இன்றைய வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அதில், பாவனி, இசைவாணி, அபினய், இமான், வருண், பிரியங்கா ஆகியோர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் பாவணி, இசைவாணி, வருண் ஆகியோர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்களிடமிருக்கும் காயின்களை பயன்படுத்தி மற்றவர்களை நாமினேட் செய்யலாம் என வாய்ப்பு கொடுக்கிறார். இதனால் பிற போட்டியாளர்கள் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement