சினிமா

எக்கச்சக்கமான விதிமீறல்கள்! செம்ம தரமான சம்பவம் இருக்கு! வைரலாகும் ஆவேச வீடியோ!!

Summary:

எக்கச்சக்கமான விதிமீறல்கள்! செம்ம தரமான சம்பவம் இருக்கு! வைரலாகும் ஆவேச வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி கடந்த சீசன்களை போல நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் ஆன நிலையில் தற்போது போட்டியாளர்கள் அனைவரும் தங்களைச் சுற்றி கேமரா இருப்பதை மறந்து தங்களது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளனர். போட்டியாளர்கள் மத்தியில் குரூப்பிசம், அதிகாரம் செய்தல் போன்றவையும் உள்ளது. மேலும் ஏராளமான விதிமீறல்களும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வார இறுதியான இன்றைய ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் கமல்ஹாசன் கடந்த வாரம் போட்டியாளர்கள் செய்த விதிமீறல்கள் குறித்து ஆவேசமாக தட்டிக் கேட்கவுள்ளார். இதுகுறித்து அவரே ப்ரோமோவில், கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளது. ஏனென்றால் உள்ளே இருப்பவர்கள் விதிகளை உடைத்தது ஏராளம். ஒவ்வொன்றாக கேட்கணும் என அவர் கூறியுள்ளார்.


Advertisement