யார் பார்த்த வேலைப்பா இது.! பிக்பாஸ் ரைசாவின் சமூகவலைத்தள பக்கத்தில் இப்படியொரு குளறுபடியா? குழம்பிப்போன ரசிகர்கள்!!

யார் பார்த்த வேலைப்பா இது.! பிக்பாஸ் ரைசாவின் சமூகவலைத்தள பக்கத்தில் இப்படியொரு குளறுபடியா? குழம்பிப்போன ரசிகர்கள்!!


bigboss raiza instagram page hacked by someone

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா. அதன்பின்னர் கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார்.

Raiza

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ரைசா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஜிவி பிரகாஷ் மற்றும் விஷ்ணு விஷால் போன்ற நடிகர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் ரொம்ப ஹாட்டாக இருக்கிறீர்கள் எனவும் பதிவிடப்பட்டுள்ளது . இந்நிலையில் இதனை கண்டரசிகர்கள் ரைசாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஹாக் செய்துவிட்டனர் என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Vera level hotness 😍 🥵🥵🥵 @gvprakash

A post shared by Raiza Wilson (@raizawilson) on