ஆதாம்மா.. அவரு எங்க இருக்காரு.! கமலையே திக்குமுக்காட வைத்த ஜி.பி.முத்து.! வைரலாகும் வேற லெவல் வீடியோ!!

ஆதாம்மா.. அவரு எங்க இருக்காரு.! கமலையே திக்குமுக்காட வைத்த ஜி.பி.முத்து.! வைரலாகும் வேற லெவல் வீடியோ!!


Bigboss promo Viral

விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 6வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

இந்த சீசனில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ஷெரினா, ஏடிகே, ஆயிஷா, மணிகண்டன், ரக்ஷிதா, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், நடன இயக்குனர் சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவா, தனலட்சுமி  ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் முதல் வாரம் அன்பு, நட்பு, கலகலப்பு சண்டை,சச்சரவு என விறுவிறுப்பாக சென்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் உலக நாயகன் கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அதனை காணவே ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் காத்திருப்பர். அவ்வாறு இன்றும் நடிகர் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். அனைவரிடமும் பேசிய கமல் முத்துவிடம் பாதாமை கொடுத்து, உங்களுக்கு பாதாம் தெரியும். ஆதாம் யாருன்னு தெரியாதா? என கிண்டலாக கேட்டுள்ளார். அதற்கு ஜி.பி. முத்து ஆதாமா? அவர் எங்க இருக்காரு? எனக் கேட்டு கமலையே திக்குமுக்காட வைத்துள்ளார்.