சினிமா

அட! பிக்பாஸ் வீட்டில் முதல் காதல் மலர்ந்தாச்சா? அதுவும் இவர்களுக்குள்ளா? வெளியான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

பிக்பாஸ் வீட்டின் இன்றைய நாளிற்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், சண்டைகள்,சுவாரசியங்கள் மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று புதிய போட்டியாளராக அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து முதல் நாளிலேயே அனைவரையும் ஆட்டம் காண வைத்தார். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டில் சுவாரசியமும், ஈடுபாடும் இல்லாமல் இருப்பதாக ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி ஆகியோரை தேர்வு செய்து  போட்டியாளர்கள் சிறையில் அடைத்துள்ளனர். பின்னர்  பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்க் ஒன்றை கொடுக்க கேப்ரில்லாவை தூக்கிக் கொண்டு சுரேஷ் நிற்பது போன்ற வீடியோவும் வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் மூன்றாவது ப்ரமோ வீடியோ அமைந்துள்ளது. அதில் பாலாஜியும் கேப்ரில்லாவும் எதார்தமாகவே சிரித்து பேசிக்கொண்டிருக்க அவர்கள் காதலிப்பது போன்று பின்னணியில் காதல் பாடலை ஒலிக்கவிட்டுள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் அடுத்த கவின் லாஸ்லியா இவர்கள்தானா என கமெண்ட் செய்துவருகின்றனர். 


Advertisement