புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அமுதவாணனுக்கு பல்பு கொடுத்து பிக்பாஸ் செய்த காரியம்.! விழுந்து விழுந்து சிரித்த கமல்.! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் சீசன் 6 தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெற்று வருகிறது. இதில் 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரத்திலேயே ஜிபி.முத்து தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர் மற்றும் அசல் கோலார் இருவரும் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனர்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்களே உள்ளனர். இந்நிலையில் கடந்த வார டாஸ்க்கின் அடிப்படையில் கதிரவன் சிறைக்கு சென்றிருந்தார். அப்போது அமுதவாணன் பிக்பாஸிடம் என் தம்பிக்கு பதில் நான் சிறை செல்கிறேன் என கூறியுள்ளார். உடனே பிக்பாஸ் அவருக்கு பல்பு கொடுத்து அமுதவாணனை ஜெயிலுக்கு செல்ல கூறியுள்ளார். இந்நிலையில் இதுக்குறித்து நடிகர் கமல் அமுதவாணனிடம் கேட்டுள்ளார்.
அப்பொழுது அமுதவாணன் பொதுவாக பிக்பாஸ் வீட்டில் சாக்லேட், சிக்கன் என எது கேட்டாலும் பிக்பாஸிடமிருந்து பதிலே வராது. அந்த நம்பிக்கையில் என் தம்பியை வெளியே விடுங்க, என்னை ஜெயிலில் போடுங்க எனக் கூறினேன். உடனே பிக்பாஸ் உங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது என ஜெயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டார். பிக்பாஸில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூறுவது உண்மையாகிவிட்டது என புலம்பியுள்ளார். அதனை கேட்டு கமல் சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.