சினிமா

தூங்கிக்கொண்டிருந்த ரியோ! பிக்பாஸ் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்! அதிர்ச்சியில் திகைத்துப்போன போட்டியாளர்கள்!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4. இதில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியிருந்த நிலையில் கடந்த வாரம் ஆஜித் வெளியேறினார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆரி,சோம்,கேப்ரில்லா ஷிவானி, பாலா, ரம்யா, ரியோ ஆகியோர் மட்டுமே உள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் பினாலே டாஸ்க் துவங்கியுள்ளது.

மேலும் அதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளிற்கான ப்ரோமோ  வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பிக்பாஸ், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரியோவை சர்ப்ரைஸாக அழைக்கிறார். இதனால் ரியோ செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் இன்றைய டாஸ்க்கும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நடைபெற்றுள்ளது.


Advertisement