சினிமா

பிரியங்கா சொன்ன வார்த்தை! மீண்டும் வெடித்து எழுந்த தாமரை! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

Summary:

பிரியங்கா சொன்ன வார்த்தை! மீண்டும் வெடித்து எழுந்த தாமரை! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3 துவங்கி செம விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. மேலும் கடந்த வாரம் முழுவதும் சண்டை,மோதல் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

அதாவது போட்டியாளரான தாமரையின் காயின்ஸை அவர் குளித்துவிட்டு உடைமாற்ற சென்றபோது சுருதி திருடிவிட்டார். இதனால் உச்சகட்ட கோபமடைந்த தாமரை துரோகம் என கூறி அவரிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதனால் சண்டை வெடித்தது. அந்த சண்டை சற்று அடங்கியிருந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை நகர மற்றும் கிராம மக்கள் என பிரித்து வாதம் செய்யும் டாஸ்க் கொடுத்துள்ளார்.

அப்பொழுது நகர மக்கள் சார்பில் பேசிய ப்ரியங்கா காயினை குறித்து பேசிய நிலையில் மீண்டும் தாமரை பொங்கி எழ துவங்கியுள்ளார். சுருதியும் அதற்கு பதிலளித்து பேச மீண்டும் அது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த ப்ரமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement