தமிழகம் சினிமா

யாரையும் கிண்டல் செய்யாதீர்கள்! பிக்பாஸ் சீசன் -3 குறித்து ஓவியா பரபரப்பு கருத்து

Summary:

bigboss-oviya

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் வீடு முழுவதும்  கேமராக்கள்   பொருத்தப்பட்டு , 100 நாட்கள், 16 பிரபலங்கள் தொலைக்காட்சி, மொபைல் போன்ற வெளி உலக தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.

bigboss க்கான பட முடிவு

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே முதல் இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்குவதற்காகன பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. .இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலே தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியானது வரும்  ஜூன் மாதம் 23 ஆம் தேதி  தொடங்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

bigboss க்கான பட முடிவு
இந்நிலையில்   சீசன்-1யில் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தவர்தான் நடிகை  ஓவியா.
தற்போது அவர் சீசன் -3 குறித்து தனது கருத்தை கூறியுள்ளார் .அதில் அவர், நாம் எல்லாம் மனிதர்கள், தவறும் செய்யோம், யாரும் உலகில் உத்தமர் கிடையாது. மக்கள்  நிகழ்ச்சியை  மட்டும்  பார்த்து போட்டியாளர்களை எடை போட கூடாது.

மேலும் இந்த நிகழ்ச்சியை பார்த்து ஒருவரை வெறுக்கலாம், ஆனால் கிண்டல் செய்வது தவறு, நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த சீசனில் நான் கலந்துகொள்ளவில்லை என்றும் மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.


Advertisement