சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மீரா முதன் முதலாக வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தீங்களா.!

Summary:

bigboss meera video after leaving from bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. மேலும் காதல் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. அவ்வாறு அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் எதற்கும் பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. 

இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட மீரா மிதுன் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டினில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளையும்,மோசடி வழக்குகளையும் சந்தித்த இவர் பிக்பாஸ் வீட்டினுள்ளும் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி சண்டை போட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவந்தார். மேலும் இயக்குனர் சேரன் மீதும் தவறான அவதூறு  ஒன்றை கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மீரா பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், முதல் முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பொழுது எனக்கு அன்பும், ஆதரவும் அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மேலும் நான் என்ன செய்தாலும் குறைகூறக் கூடிய ரசிகர்களுக்கும் நன்றிகள் . எனது படங்களுக்கு ஆதரவு அளியுங்கள் என கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement