சினிமா

ப்பா.. பிக்பாஸ் லாஸ்லியாதானா இது! நம்பவே முடியாத அளவிற்கு இப்போ எப்படி மாறிட்டார் பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

ப்பா.. பிக்பாஸ் லாஸ்லியாதானா இது! நம்பவே முடியாத அளவிற்கு இப்போ எப்படி மாறிட்டார் பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களால் பெருமளவில் கவரப்பட்டு பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சில நாட்களிலேயே சிறு பிள்ளை போன்ற தனது செயலால், சிரிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டார். அவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது. 

 அதனைத் தொடர்ந்து அவர் போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி ஏராளமான விமர்சனங்களை சந்தித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் சினிமாவில் பிஸியாகிவிட்டார். அவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்த பிரெண்ட்ஷிப் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் பரவும். அந்த வகையில் தற்போது லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் இடையில் சற்று எடை அதிகரித்து இருந்த லாஸ்லியா தற்போது எடை குறைந்து எப்பொழுதும் இல்லாத அளவிற்கு செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 


Advertisement