சினிமா

காமெடிக்கும் லிமிட் இருக்கு.. புகழை வெளுத்து வாங்கிய ரம்யா கிருஷ்ணன்! இறுதியில் என்னாச்சு பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பொழுது போக்கும் வகையிலும் ஏராளமான

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பொழுது போக்கும் வகையிலும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கெனவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவ்வாறு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள்.

நடன நிகழ்ச்சியான இதில் பிக்பாஸ் நான்கு சீசனிலும் கலந்து கொண்ட பலரும் ஜோடியாக போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். ஆஜித்- கேப்ரில்லா, சென்றாயன்-ஜூலி, ஜித்தன் ரமேஷ்- சம்யுக்தா, அனிதா சம்பத்- ஷாரிக், நிஷா- பாலாஜி, சோம்-ஐஸ்வர்யா, வனிதா- சுரேஷ் சக்ரவர்த்தி, பாத்திமா பாபு- மோகன் வைத்யா உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியை கலகலப்பாக்கும் வகையில் புகழ், தங்கதுரை, குரோஷி ஆகியோர் வருகை தந்துள்ளனர். அப்பொழுது புகழ் கலாய்க்கும் பொழுது ரம்யாகிருஷ்ணன், காமெடிக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. இங்க எப்ப காமெடி செய்யணும்னு இருக்கு புகழ் என கடுமையாகப் பேசியுள்ளார். இதனை கேட்டதும் புகழின் முகம் சுருங்க துவங்கியது. உடனே ரம்யா கிருஷ்ணன் பிராங்க் என கூறி தான் கலாய்த்ததாக விழுந்து சிரித்துள்ளார். அந்த பிரமோ வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


Advertisement