கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 4! யாரெல்லாம் களமிறங்கியுள்ளார்கள் பார்த்தீர்களா! ஆட்டம் களைகட்டும்!

கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 4! யாரெல்லாம் களமிறங்கியுள்ளார்கள் பார்த்தீர்களா! ஆட்டம் களைகட்டும்!


bigboss-contestants-name-list

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுமா என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் பிக்பாஸ் 4வது சீசன் இன்று மிகவும் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி இன்று முதல் திங்கள் துவங்கி ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என பெரும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. மேலும் ரசிகர்களே யூகித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளபோவது இவர்கள்தான் என பெயர்பட்டியலும் சமூக வலைதளங்களில் வைரலானது.

bigboss

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரியோ ராஜ், சனம் ஷெட்டி, நடிகை ரேகா, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோம்சேகர், ஷிவானி, கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் நாட்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.