சினிமா

நீங்களே வச்சுக்கோங்க.. அவார்டை திருப்பி கொடுத்த பிக்பாஸ் பாலா! ஏன், என்ன பிரச்சனை தெரியுமா??

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சிறப்பாக வி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சிறப்பாக விளையாடி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் பிரபலமானார். 

மாடலான இவருக்கு சமீபத்தில் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் நிகழ்ச்சியில் Biggest sensation on reality Television award கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாலாஜி அந்த விருது தனக்கு வேண்டாம் என திருப்பி கொடுப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கான காரணம் என்ன என ரசிகர்கள் எழுப்பினர்.

மேலும் இதுக்குறித்து பாலா, விருது பெறும்போது மேடையில் 2 நிமிடங்கள் தான் பேசிய எதுவும் ஒளிபரப்பாகவில்லை. இது தன்னை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது.  பெரும் ஏமாற்றமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நிகழ்ச்சியின்போது மேடையிலிருந்த பிஹைண்ட்வுட்ஸ் ரிவியூவரை அவர் விமர்சனம் செய்து பேசியதே அந்த காட்சிகள் ஒளிபரப்பபடாதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.


Advertisement