சினிமா

இதுதாங்க அந்த 2 நிமிட காட்சி! கட் செய்த காட்சியை லீக் செய்த பிக்பாஸ் பாலா! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலான இவருக்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது விழாவில் Biggest sensation on reality Television award கொடுக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சி அண்மையில் ஒளிபரப்பு செய்யப்பட்டநிலையில் பிக்பாஸ் பாலா, தான் விருது பெறும்போது 2 நிமிடங்கள் மேடையில் பேசிய எதுவுமே ஒளிபரப்பாகவில்லை. இது தன்னை அவமானப்படுத்தும் விதமாகவும், பெரும் ஏமாற்றமாக உள்ளது என குறிப்பிட்டு, தனக்கு அந்த விருது வேண்டாம் என திருப்பி கொடுப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் ரிவியூவரை அவர் விமர்சனம் செய்து பேசியதால்தான் அந்த காட்சிகள் ஒளிபரப்பாகவில்லை என கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது  பாலா விருது விழாவில் தான் மேடையில் பேசும்போது ரசிகர் ஒருவர் செல்போன் கேமராவில் எடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இதுதான் நான் பேசியது. இதைத்தான் கட் செய்து விட்டனர் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement