
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிக்பாஸ் பாலாஜி கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்ற நிலையில் வெற்றிகரமாக கடந்த ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. இதில் ஆரி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றார்.
பாலா பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, எதற்கெடுத்தாலும் அனைவரிடமும் கோபப்பட்டு பெரும் எதிர்ப்பை பெற்றார். ஆனாலும் ரசிகர்களின் ஆதரவால் இறுதிவரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இவரை பலரும் அறிந்திராத நிலையில் தற்போது பாலாவுகென பெரும் ரசிகர்களே உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னரான ஆரி சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தவர். அவர் சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை போன்ற அனைத்திலும் மக்களுக்கு ஆதரவாக முன்நின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாறு ஆரி போன்றே பாலாஜியும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து இதுவரை யாரும் அறிந்திராத நிலையில் அந்த புகைப்படத்தை தற்போது பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement