வாவ்.. பொண்ணு ரெடிங்கோ.. திருமணக் கோலத்தில் தேவதையாய் ஜொலிக்கும் பிக்பாஸ் அக்ஷரா! எம்புட்டு அழகு!!

வாவ்.. பொண்ணு ரெடிங்கோ.. திருமணக் கோலத்தில் தேவதையாய் ஜொலிக்கும் பிக்பாஸ் அக்ஷரா! எம்புட்டு அழகு!!


Bigboss akshara photoshoot viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் அக்ஷரா ரெட்டி. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். ஆர்மியும் உருவானது. மாடலிங் துறையை சேர்ந்த இவர் ஆல்பம் பாடல்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளைப் பெற்று எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா தனது பிக்பாஸ் நண்பர்களை சந்தித்த மற்றும் வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது திருமண கோலத்தில் மணப்பெண் போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.