சினிமா

மஹத்துக்கு முத்தம் கொடுத்த யாஷிகா! வைரலாகும் வீடியோ!

Summary:

Big boss yashika and mahat joint together in vijay tv jodi

மங்காத்தா திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் மஹத். அதேபோல் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் இராது அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் திரைஉலகில் பிரபலமானவர் நடிகை யாஷிகா.

இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் டூ வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்றே சொல்லலாம்.

மேலும் மஹத், யாஷிகா. முதன் சீசன் ஆரவ் ஓவியா காதல் போல, இவர்கள் காதலும் பேசப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்த சில விசயங்கள் சர்ச்சையாக பேசப்பட்டது.

ஒரு கட்டத்தில் மஹத் நான்அவரை காதலிக்க வில்லை என்பது போல சொல்லிவிட்டார். இதனால் யாஷிகா அழுததோடு மஹத்துக்கு ஏற்கனவே காதலி இருப்பதால் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

தற்போது இருவரும் ஜோடி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்ததுள்ளார்கள். அதோடு மஹத்துக்கு யாஷிகா முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது. 


Advertisement