"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
பிக்பாஸ் பிரபலத்தின் கணவரை திட்டி ட்வீட் போட்ட வனிதா! காரணம் என்ன தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 6 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் முகேன் நேரடியாக பைனலுக்கு சென்றுள்ளார். மேலும் மற்ற போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனில் உள்ளனர். இதை எல்லாம் தாண்டி யார் வெற்றி பெற போகிறார் என மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வனிதா பிக்பாஸ் சீசன் 1யில் கலந்து கொண்ட சுஜா வருணியின் கணவரை திட்டி ட்வீட் செய்துள்ளார். அதாவது நீங்கள் என்னை விமர்சனம் செய்ததை பார்த்து உங்கள் அம்மா சந்தோஷப்பட்டிருக்க மாட்டார்கள். இப்போது உங்களுக்கும் ஒரு குழந்தை உள்ளது, சரியான நபராக நடந்து கொள்ளுங்கள் என கமெண்ட் செய்திருக்கிறார்.
Dear @Shivakumarr222 . I knew your mother very well and of course your dad is my family. Im sure your late mother wouldn't be proud of certain comments you have posted on me in #BiggBoss you now have a child too.try to be more responsible in commenting about another mother.
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 23, 2019