பேருந்தில் பெண்களை உரசிய விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் சரவணன்!

பேருந்தில் பெண்களை உரசிய விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் சரவணன்!big boss sarvanan ask apologies


பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

தற்போது பிக்பாஸ் 3-வது சீசன் ஒரு மாதத்தை தாண்டிவிட்டது. ஒவ்வொரு சீசனிலும் சண்டை, சர்ச்சை, வாக்குவாதம் என ஏதாவது ஒரு வில்லங்கம் அரங்கேறி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களிடையே உரையாடுவார். 

அப்போது கமல்ஹாசன், அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் கூட்டத்தில் நெரிசலில் செல்கின்றனர். அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூறும்பொழுது தனது கையை உயர்த்தி காட்டினார் சரவணன். 

அதை பார்த்த கமல்ஹாசன் பார்த்தீர்களா சரவணன் கூட அதைக் கண்டித்திருப்பார் போல என்று கமல்ஹாசன் கூறினார், ஆனால் சரவணன் நானும் கல்லூரிக் காலத்தில் அவ்வாறு செய்திருக்கிறேன் என்று கூற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனை கேட்ட பார்வையாளர்களும் கைதட்டினார்கள். கமல்ஹாசனும் சிரித்தார்.

சரவணனின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சரவணனை மன்னிப்பு கேட்கும்படி பிக்பாஸ் கூறினார். இதையடுத்து தன்னைப் போல யாரும் தவறு செய்யக்கூடாது எனவும், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும்  சரவணன் தெரிவித்துள்ளார்.