சினிமா

அடேங்கப்பா! பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையா இது!! ஆள் அடையாளமே தெரியலையே! புகைப்படங்கள் இதோ!

Summary:

bharathi kannamma serial actress photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே தற்போது மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. அந்த தொடரில் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரோஷினி.

மேலும் அந்த தொடரில் மிகவும் குடும்ப பெண்ணாக மேக்கப் இல்லாமல் கருப்பு நிற தோற்றத்துடன் அவர் நடித்து வருகிறார். அவரது நிறத்தையும்,  அழகையும் வைத்து அத்தொடரில் அவரை வெறுத்து வருவர். இந்நிலையில் தனது நடிப்பின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நடிகை ரோஷினி பெருமளவில் பிரபலமானார்.

 இந்நிலையில் கண்ணம்மாவின் புகைப்படங்கள் சில சமூகவலைதளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குடும்ப பெண்ணாக,  கருப்பு நிறமாக சீரியலில் நடித்த அவர் அந்த புகைப்படங்களில் செம மார்டன் உடைகளில் மிகவும் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான  நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் நம்ம கண்ணம்மாவா  இது என பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 


Advertisement