என்னது! பாரதி கண்ணம்மா ஹீரோயின் ரோஷினிக்கு ஒருநாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கான ரசிகர்கள்!!

என்னது! பாரதி கண்ணம்மா ஹீரோயின் ரோஷினிக்கு ஒருநாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கான ரசிகர்கள்!!



Bharathi kannamma roshini salary detail viral

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று நாளுக்கு நாள் அதிரடியான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் மற்றும் ஹீரோயினான கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்தொடரில் மாடலான ரோஷினியின் எதார்த்தமான நடிப்பு மக்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த நிலையில் அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வருவதால் அவர் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியதாக தகவல்கள் பரவியது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bharathi kannamma

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பள விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தற்போது கண்ணம்மா ரோலில் நடிக்கும் ரோஷினிக்கு ஒரு நாளுக்கு 20 ஆயிரம், பாரதி ரோலில் நடிக்கும் அருணுக்கு 20 ஆயிரம், வெண்பாவாக நடித்துவரும் ஃபரினாவுக்கு 10 ஆயிரம், சௌந்தர்யா ரோலில் நடிக்கும் நடிகை ரூபஸ்ரீக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.