சினிமா

அட தெரியவே இல்லையே.. 7 மாத கர்ப்பமாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை! ஒத்த புகைப்படத்தால் செம இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொட

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

 இந்த தொடரில் ஹீரோவாக, பாரதியாக அருண் பிரசாத் நடித்து வருகிறார். மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக ரோஷினி நடித்து வருகிறார். மேலும் இத்தொடரில் கொடூர வில்லியாக, வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் பரினா ஆசாத்.  இவர் இதற்கு முன்பு சில தொடர்களில் நடித்தாலும் அவரை பெருமளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது பாரதி கண்ணம்மா தொடர்தான்.

இந்த நிலையில் பரினா தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். இன்னும் மூன்று மாதத்தில் குழந்தை பிறக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதனை மிக மகிழ்ச்சியாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்னும் 3 மாதத்தில் குழந்தை பிறக்கவுள்ளது. குழந்தையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். என் உடல் அதிசயம் செய்துள்ளது. நான்கு வருட கனவு நினைவாகியிருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பலரும் வெண்பாவிற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement