அம்மாடி.. காமுகனை கத்தரிக்கோலால் கழுத்திலேயே குத்திக்கொன்ற கண்ணம்மா.. மாஸ் கிளப்பும் பாரதி கண்ணம்மாவின் இன்றைய ப்ரோமோ..!!

அம்மாடி.. காமுகனை கத்தரிக்கோலால் கழுத்திலேயே குத்திக்கொன்ற கண்ணம்மா.. மாஸ் கிளப்பும் பாரதி கண்ணம்மாவின் இன்றைய ப்ரோமோ..!!


Bharathi Kannama Serial Promo

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது பரபரப்பு கட்டம் உச்சத்தினை எட்டியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த நெடுந்தொடர் பாரதிகண்ணம்மா. இத்தொடரில் முதலில் குழந்தைகள் பிறக்க, அதனைப் பிரித்து தற்போது அவர்கள் ஒன்று சேர்வார்களா? பாரதி தனது மனைவியையும், குழந்தையையும் ஏற்றுக்கொள்வாரா? என்ற பரபரப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் கண்ணம்மாவின் பெயரை உபயோகம் செய்து அவர் பணியாற்றும் மருத்துவமனையில் தீவிரவாதிகள் திடீரென புகுந்தனர். 

இதில் காமதீவிரவாதி ஒருவன் பெண்களை தனியாக அழைத்துச் சென்று தனது இச்சையை தீர்த்துக் கொள்ளும் நிலையில், இறுதியாக அவன் கண்ணம்மாவிடமும் அத்துமீற முயற்சிக்கிறான்.

இவ்வாறான சூழலில் தனியாக அழைத்துச் செல்லப்பட்ட கண்ணம்மா பத்திரகாளி போல மாறி கயவனை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த பரபரப்பு ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த ப்ரோமோ பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.