பாரதி கண்ணம்மா தொடரில் புதிய கண்ணமாக நடிக்க உள்ளது இந்த நடிகையயாம் ! பெரும் ஆர்வத்துடன் ரசிகர்கள் ....

Summary:

பாரதி கண்ணம்மா தொடரில் புதிய கண்ணமாக நடிக்க உள்ளது இந்த நடிகையயாம் ! பெரும் ஆர்வத்துடன் ரசிகர்கள் ....

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று நாளுக்கு நாள் சுவாரஸ்யங்களுடனும்  அதிக அளவில்  விறுவிறுப்பதுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா.

இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் மற்றும் ஹீரோயினான கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இத்தொடரில் மாடலான ரோஷினியின் எதார்த்தமான நடிப்பு மக்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த நிலையில் அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வருவதால் அவர் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியதாக பல  தகவல்கள் வெளிவந்துள்ளது இதனால் ரோஷினி பல நாட்களின் காட்சிகளை விரைவில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது .  

இந்த நிலையில் அடுத்த கண்ணாம்மா யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த நக்ஷத்ரா புதிய கண்ணம்மா வேடத்தில் தற்போது நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் ரசிகர்களும் நக்ஷத்ரா நடிப்பை எதிர்பார்த்து பெரும் ஆர்வத்துடன் உள்ளனர் . 


Advertisement