சினிமா

நயன்தாராவா இது! அழகில் மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Summary:

beautiful-nayanthara-recent-pics1

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

நயன்தாரா, தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் அனைவரின் மத்தியிலும் பிரபலமான ஒரு பெயர். தன் மீது எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் திரையில் தனது திறமையை நிரூப்பித்து வருகிறார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் நடித்துள்ள நயன்தாராவின் நிஜ வாழ்க்கையை படமாக்க வேண்டுமென்றாலும் பல்வேறு நடிகர்களை நடிக்க வைக்க வேண்டிவரும். அதற்கான காரணம் கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும்.

நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் பல விதமாக விமர்சித்தாலும் அவரது அழகு மற்றும் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஐயா, கஜினி, சந்திரமுகி ஆகிய படங்களில் பார்த்த நயன்தாராவிற்கும் இப்போது பார்க்கும் நயன்தார்விற்கும் எவ்வளவோ வித்தியாசம். வயது ஆக ஆக அழகு கூடிக்கொண்டே செல்கிறது.

இப்படிப்பட்ட அழகு தேவதையுடன் தற்போது ஊர் ஊராக சுற்றும் பாக்கியம் பெற்றவரை பற்றியும் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். #தளபதி63 சூட்டிங்கை முடித்த நமது லேடி சூப்பர் ஸ்டார் இப்போது அந்த புதிய காதலருடன் தான் கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அந்த சுற்றுப்பயணத்தில் தான் நயன்தாராவின் காதலர் வித்தியாசமான புகைப்படம் எடுக்க வேண்டுமென்று முயற்சித்து அந்த அழகு தேவதையின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதில் ஒரே ஒரு கவலை அந்த காதலரின் உருவமும் அந்த புகைப்படத்தில் பதிந்திருப்பது தான். என்ன செய்வது, மனதை தேற்றிக்கொள்ளுங்கள் ரசிக பெருமக்களே.


Advertisement