சினிமா

உடல்நலம் மோசமான நிலையில், என்ஜிகே படநடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்! சோகத்தில் திரையுலகம்!!

Summary:

bala singh derious condition in hospital

நடிகர் நாசரின் இயக்கத்தில் உருவான அவதாரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேடை நாடக கலைஞர் பாலா சிங். இவர் அதனை தொடர்ந்து இந்தியன், சிம்மராசி, ராசி, புதுப்பேட்டை விருமாண்டி என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

 மேலும் அவர் கடந்த ஆண்டில் வெளிவந்த தானாசேர்ந்த கூட்டம், சாமி2, என்ஜிகே, மகாமுனி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ்சினிமா மட்டுமின்றி,  சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் 67 வயதாகும் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

மேலும் தற்போது அவர் உடல்நிலை மோசமாகி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர்  பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 
 


Advertisement