சினிமா

பர்த்டே கொண்டாட்டம்! அம்மாவிற்கு முன்பே கேக் ஊட்டிய பாலா!! ப்பா..ஷிவானியின் ரியாக்ஷனை பார்த்தீர்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற பகல்நிலவ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற பகல்நிலவு தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில்  கதாநாயகியாக நடித்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் பாதியிலேயே அவர் அந்த தொடரை விட்டு விலகிவிட்டார்.

பின்னர் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சக போட்டியாளரான பாலாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் FREEZE டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா அவர் பாலாவுடன் பழகுவது குறித்து கடுமையாக கண்டித்தார். பின்னர் பாலாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு ஷிவானி போட்டிகளில் கவனம் செலுத்தி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார்.

 பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அனைவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். இந்தநிலையில் ஷிவானி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாவும் கலந்துகொண்டுள்ளார். மேலும் பாலா ஷிவானியின் அம்மாவிற்கு முன்பே அவருக்கு கேக் ஊட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement