நடுராத்திரியில் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து விஜய் டிவி பாலா என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

நடுராத்திரியில் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து விஜய் டிவி பாலா என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!


Bala eating in bus stand video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அவ்வாறு மக்களைக் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. இதில் கலந்து கொண்டு தனது டைமிங், ரைமிங் காமெடியால் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் பாலா.

அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது காமெடியால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக் கொண்டு வருகிறார்.

பாலா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் பாலா தற்போது தெருவோரத்தில் பேருந்து நிலையத்தில் அமர்ந்து சாப்பிட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் பலரும் பாலாவின் எளிமையை பாராட்டி வருகின்றனர்.