என்னைய அடிக்கிறாங்கப்பா.. அப்பா மீது திடீர் பாசம் கொண்ட இனியா..! வீட்டை விட்டு கோபியுடன் செல்ல முடிவு?..!!

என்னைய அடிக்கிறாங்கப்பா.. அப்பா மீது திடீர் பாசம் கொண்ட இனியா..! வீட்டை விட்டு கோபியுடன் செல்ல முடிவு?..!!


Bakiyalakshmi serial today promo

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடர், தமிழ் மக்களால் அதிகம் பார்க்கப்படும் நெடுந்தொடரில் ஒன்றாகும். இத்தொடரில், கடந்த வாரத்தில் இனியா செல்போன் எடுத்து சென்ற தவறுக்காக, பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோரை அழைத்து வர கூறியிருந்தது. 

Bakiyalakshmi promo

ஆனால், எதையும் வீட்டில் சொல்லாத இனியா, பள்ளிக்கு சென்ற பின்னர் தனது தந்தை கோபிக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிக்கிறார். அவரும் மகளுக்காக பள்ளிக்கு வந்து சென்ற நிலையில், இந்த தகவல் பாக்கியலட்சுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்து அவர்கள் அனைவரும் சேர்ந்து இனியாவை கண்டிக்கின்றனர். பாக்கியலட்சுமி மகளை அடிக்கிறார். அப்போது, கோபி தனது வீட்டிற்கு செல்கிறார்.

Bakiyalakshmi promo

இந்த கலவரம் நடக்கும் சத்தம் வெளியே கேட்க, மகளை பார்க்க வந்த கோபி என்ன நடந்தது என புரிந்துகொள்ளகிறார். இறுதியில் தனது மகளை தன்னுடன் அழைத்து சென்றுவிடுவேன் என்று கூற, அனைவரும் அதிர்ச்சியில் ஆளாகின்றனர். இனியா என்ன பதில் சொல்லப்போகிறார்? என்ற பயமும் ஏற்படுகிறது. 

இதனால் அடுத்த வாரத்தில் இனியா எடுக்கப்போகும் முடிவு என்ன? என்ற பரபரப்பு பாக்யலட்சுமி தொடர் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.