ஷூட்டிங் ஸ்பாட்டில் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள்! அதுவும் யாரெல்லாம் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

ஷூட்டிங் ஸ்பாட்டில் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள்! அதுவும் யாரெல்லாம் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!


 bakialakshmi serial artist dance video viral

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு குடும்ப பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. ஒரு சாதாரண குடும்பத் தலைவி குடும்பத்தை கவனித்துக்கொண்டு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க போராடுவதை மையமாக கொண்டு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் பொறுப்பான அம்மாவாக, அப்பாவி மனைவியாக பாக்யா என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா என்பவர் நடித்து வருகிறார். மேலும் சிடுமூஞ்சி கணவராக, முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருக்கும் கணவரான கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ், மற்றும் அவரது முன்னாள் காதலியான ராதிகா கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகின்றனர். 

இத்தொடர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபி, ராதிகா, பாக்கியலட்சுமி மற்றும் செல்வி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்கள் செம ஜாலியாக, கலகலப்பாக குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.