தமிழகம் சினிமா

ரஜினிக்கு திரைத்துறையின் மிக உயரிய விருது.! பாராட்டித்தள்ளிய முதலமைச்சர் பழனிச்சாமி.!

Summary:

திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே  விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழ

திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே  விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகின்றது. 

திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக  நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது. திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, ஒவ்வொரு வருடமும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்க்கு முன்னதக நடிகர் திலகம் சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல விருதுகள் பெற வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார்.


Advertisement